News June 6, 2024
டெல்லியில் தோல்வி குறித்து பேசிய ஆம் ஆத்மி எம்.பி.,

மக்களவைக்கு பாஜகவையும், சட்டசபைக்கு ஆம் ஆத்மியையும் தேர்வு செய்வதை டெல்லி மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக அக்கட்சியின் எம்.பி., சந்தீப் பதக் கூறியுள்ளார். டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், டெல்லியில் இம்முறை குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் பாஜக வென்றுள்ளது. அதே நேரம் பஞ்சாப்பில் அதன் வாக்கு விகிதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவித்தார்.
Similar News
News August 19, 2025
NDA கூட்டணி கட்சிகள் ஆலோசனை

டெல்லியில் NDA கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. துணை ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அதேபோல், INDIA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து இன்று பிற்பகல் 12:30 மணிக்கு கூட்டணி கட்சிகள் ஆலோசிக்க உள்ளன.
News August 19, 2025
கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு.. இன்று விசாரணை

மசோதாக்கள் மீது முடிவெடுக்க கவர்னர், ஜனாதிபதிக்கு காலக்கெடு விதித்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது. சட்டப்பேரவை இயற்றிய மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. அதில், மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் கவர்னரும், ஜனாதிபதியும் முடிவெடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. அதை எதிர்த்து ஜனாதிபதி 14 கேள்விகளை எழுப்பியிருந்தார்.
News August 19, 2025
ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 குறைந்து ₹73,880-க்கும், கிராமுக்கு ₹40 குறைந்து ₹9,235-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹126-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹1,26,000-க்கும் விற்பனையாகிறது.