News June 6, 2024

வேலூரில் மீண்டும் திறப்பு

image

வேலூரில் உள்ள பெரியார் பூங்காவை தனியார் நிறுவனம் பராமரித்து வந்தது. பின்னர் பல காரணங்களால் தனியார் நிறுவனம் பூங்கா பராமரிப்பு பணியை சில ஆண்டு நிறுத்தியது. இதனால் பூங்காவை மாநகராட்சி, மத்திய தொல்லியல் துறையிடம் நேற்று (ஜூன் 5) ஒப்படைத்தது. இன்னும் 2 மாதத்திற்குள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

மானிய விலையில் இரு சக்கர வாகனங்கள் கலெக்டர் தகவல்

image

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான உலமா பணியாளர்கள், மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். இதற்கான படிவம் மற்றும் விவரங்களை வேலூர் ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, உரிய ஆவணங்களுடன் வரும் மார்ச் 13-ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தனது அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 12, 2026

வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 12, 2026

வேலூர் ஆட்சியர் தலைமையில் மகளிர் தின விழா

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.11) ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட சமூக நல அலுவலர் உமா, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) தேன்மொழி, தமிழ்வளர்ச்சி துணை இயக்குநர் ஜெயஜோதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் ஜெயசித்ரா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!