News June 5, 2024
சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இருவரும் NDA மற்றும் INDIA கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றிருந்தனர். விமான நிலையத்தில் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், சட்டப்பேரவை தேர்தல் வெற்றிக்காக வாழ்த்துகளை தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
ஆகஸ்ட் 8: வரலாற்றில் இன்று

* 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயர் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலையாகக் கருதப்படுகிறது. *1942 – இந்திய தேசிய காங்கிரஸ் பம்பாயில் கூட்டிய மாநாட்டில், வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. *1947 – பாகிஸ்தானின் தேசியக் கொடி அங்கீகரிக்கப்பட்டது. *2014 – ஆப்பிரிக்காவில் எபோலா நோய்ப் பரவல் தொடர்பாக பொதுநல அவசரகால நிலையை அறிவிக்கப்பட்டது.
News August 8, 2025
இந்தியாவிற்கு ஆதரவாக களமிறங்கிய சீனா

இந்திய பொருள்களுக்கு 50% வரிவிதித்த டிரம்பை, இந்தியாவிற்கான சீன தூதர் Xu Feihong சாடியுள்ளார். கொடுமைகாரர்களுக்கு ஒரு அங்குலம் கொடுத்தால், அவர்கள் ஒரு மைல் தூரம் செல்வார்களாம் என்ற பழமொழியை சுட்டிக்காட்டி அவர் விமர்சித்துள்ளார். மேலும், அமெரிக்கா வரிவிதிப்பை மற்ற நாடுகளை அழுத்தும் ஆயுதமாக பயன்படுத்துவதாகவும், ஐநா மற்றும் உலக வர்த்தக விதிகளை மீறுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 8, 2025
ரேப் கேஸில் பாக்., வீரர் கைது

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இங்கி., போலீசார் கைது செய்துள்ளனர். பாக்., ஏ அணிக்காக விளையாட இங்கி., பயணம் மேற்கொண்டபோது, பாக்., வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை சஸ்பெண்ட் செய்த PCB, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது.