News June 5, 2024
முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேயின் வென் சி ஹூவுடன் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 15-21, 21-15, 14-21 என்ற செட் கணக்கில் சிந்து தோல்வியடைந்து வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப்பை 21-18, 21-6 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனான் வீழ்த்தினார்.
Similar News
News August 8, 2025
ரேப் கேஸில் பாக்., வீரர் கைது

பாக்., கிரிக்கெட் வீரர் ஹைதர் அலியை பாலியல் வன்கொடுமை வழக்கில் இங்கி., போலீசார் கைது செய்துள்ளனர். பாக்., ஏ அணிக்காக விளையாட இங்கி., பயணம் மேற்கொண்டபோது, பாக்., வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டார். இருப்பினும், அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக, அவரை சஸ்பெண்ட் செய்த PCB, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியது.
News August 8, 2025
ஆபரேஷன் சிந்தூரில் இஸ்ரேல் ஆயுதங்கள்: நெதன்யாகு

ஆபரேஷன் சிந்தூரின் போது, இந்தியா தங்களது ஆயுதங்களை பயன்படுத்தியதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பான Barak-8 ஏவுகணைகள் மற்றும் HARPY டிரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், இவை போர்க்களத்தில் நன்கு செயல்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். எதிரி நாட்டு ரேடார் அமைப்புகளை HARPY டிரோன்கள் துல்லியமாக தாக்கும். Barak-8 ஏவுகணை நீண்ட தூரம் சென்று தாக்கும்.
News August 8, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*ஒரு சமூகத்தின் பெண்களின் நிலை கொண்டே அந்த சமூகத்தின் தரம் மதிப்பிடப்படும். *என்றும் நினைவில் கொள்! மனிதனாக பிறந்தவன் பயனின்றி அழியக்கூடாது. *மக்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, உங்கள் சொந்தப் பாதையை பின்தொடருங்கள். *உழைப்பு தான் எல்லா செல்வங்களுக்கும் மதிப்புகளுக்கும் மூலதனம். *நம் வாழ்வில் கிடைக்காத பெரும் செல்வம், நாம் வீணாக கழிக்கும் ஒவ்வொரு வினாடியும்தான்.