News June 5, 2024
விவசாயிகளுக்கு உளுந்து மகசூல் போட்டி

வேளாண்மைதுறை சார்பில் விவசாயிக்கு உளுந்து சாகுபடி போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 50 சென்ட் அளவில் மட்டும் அறுவடை செய்யப்படும். முதல் பரிசாக ரூ.250000, 2 ஆம் பரிசாக ரூ.150000, 3 ஆம் பரிசாக ரூ.100000 வழங்கப்படும். இதில், குறைந்தப்பட்ச மகசூல் எக்டருக்கு 888 கிலோ. 15.03.2025-க்குள் அறுவடை செய்ய வேண்டும். இதற்கு அருகாமையிலுள்ள வேளாண்மை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News November 6, 2025
குமரி: தீயில் கருகிய சிறுவன் உயிரிழப்பு

மேலஉடையப்பன் குடியிருப்பை சேர்ந்த பவிஷ்ணு(13) தீபாவளி அன்று உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் உறவினர் சந்திராதேவி(60) வீட்டிற்கு பட்டாசு வெடிக்க சென்ற போது விளக்கில் இருந்த மன்எண்ணெய் கொட்டி தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய நிலையில் சந்திராதேவி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
News November 6, 2025
கன்னியாகுமரி: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி

குமரி எஸ்.பி ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தற்போது பயன்பாட்டியில் உள்ள Grindrசெயலி மூலம் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் சிலர் இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
குமரி: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பல லட்சம் மோசடி

ராமன்துறை சுஜின் என்பவர் கேத்ரின் பிளஸ்சி என்பவரை காதலித்து 2023 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அவரிடம் கேத்தரின் பிளஸ்சி ரூ.12 லட்சம் வாங்கியுள்ளார். சேர்ந்து வாழ சுஜின் பல முறை கேட்டும் சம்மதிக்கவில்லை. பிளஸ்சி வேறு நண்பர்களுடன் பழகி வந்தது சுஜினுக்கு தெரிந்ததையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் கேத்தரின் பிளஸ்சி மீது வழக்கு பதிந்துள்ளனர்.


