News June 5, 2024
குமரியில் லேசான நிலநடுக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. குமரிமுனை, விவேகானந்தபுரம், குண்டல், கொட்டாரம், அஞ்சுகிராமம் உள்ளிட்ட இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நில அதிர்வின் ரிக்டர் அளவு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
Similar News
News March 4, 2026
குஞ்சு பொரித்தவுடன் எத்தனை சீட் என சொல்வோம்: மநீம

திமுக கூட்டணிக்கு மநீம எப்படி வலுசேர்க்கும் என்ற தரவுகளை தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழுவிடம் ஒப்படைத்துள்ளோம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம் தெரிவித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், இது ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைதான் என்றார். எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பதை கோழி அடைகாப்பதை போல அடைகாத்து வருகிறோம் என்றும், குஞ்சு பொறிக்கும் போது உங்களுக்கே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
News March 4, 2026
இந்தி திணிப்பு புளித்துப் போன காமெடி: அண்ணாமலை

இந்தி திணிப்புக்கு <<19295250>>CM ஸ்டாலின்<<>> தெரிவித்த கண்டனத்துக்கு அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். திமுக அரசுக்கு எதிர்ப்பு எழும்போது, பழைய தகரப் பெட்டியைத் திறந்து இந்தித் திணிப்பை எடுத்துக் காட்டு என்று உங்கள் தந்தை சொல்லிவிட்டுச் சென்றாரா என அவர் சாடியுள்ளார். புளித்துப்போன இந்தித் திணிப்பு காமெடி பண்ணாமல், உண்மையான மக்கள் பிரச்சினைகள் குறித்து எப்போது பேசுவீர்கள் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News March 4, 2026
1,000 ஆண்டுகளாக பெண்களை அனுமதிக்காத விசித்திர நகரம்!

இக்காலத்திலும் இப்படி ஒரு இடமா என அதிர்ச்சியுடன் கேட்கும் அளவிற்கு உள்ள இடம் தான் மவுண்ட் ஏத்தஸ். கீரிஸில் உள்ள இத்தீபகற்பத்தில் கடந்த 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக பெண்களுக்கு அனுமதி கிடையாதாம். ஏன் பெண் விலங்குகளுக்கு கூட அங்கு தடை உள்ளது. கிழக்கு மரபுவழி கிறிஸ்துவத்தின் மிக முக்கியமான ஆன்மிக மையமாக கருதப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக யுனெஸ்கோவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


