News June 5, 2024
கவனம் ஈர்த்த கன்னியாகுமரி தொகுதி

நட்சத்திர தொகுதியான கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இத்தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் மூத்த அரசியல்வாதியான பொன்.ராதாகிருஷ்ணன் தோல்வியைத் தழுவியுள்ளார். இத்தொகுதியில் இதுவரை திமுக 1 முறையும், காங்., 5 முறையும், பாஜக 2 முறையும், சிபிஎம் மற்றும் தமாக தலா 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Similar News
News November 7, 2025
குமரி: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

குமரி மக்களே, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். SHARE IT!
News November 7, 2025
குமரி: புகழ்பெற்ற சிவாலயத்தில் கொள்ளை முயற்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற 12 சிவாலயங்களில் ஒன்றான திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்துள்ளனர். ஆனால் உண்டியல் பணம் எதுவும் திருட்டுப் போகவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News November 7, 2025
குமரி அருகே விபத்தில் ஒருவர் பலி

அனந்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜிஸ்(21) தனியார் உணவகத்தில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் இருசக்கர வாகனத்தில் தனது நண்பருடன் நித்திரவிளை – விரிவுரை சாலையில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனம் மின் கம்பத்தில் மோதியதில் அஜிஸ் படுகாயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


