News June 5, 2024
இமயமலையிலிருந்து சென்னை திரும்பினார் ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த், ‘வேட்டையன்’ படப்பிடிப்பு முடிந்ததையடுத்து இமயமலைக்கு ஆன்மீக சுற்றுலா மேற்கொண்டார். அங்கு ஹரித்துவார், பாபாஜி குகை என பல இடங்களுக்கு சென்றார். அங்கிருந்து வெளியான அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், ஒருவார ஆன்மீக பயணத்தை முடித்து இன்று (ஜூன் 5) சென்னை திரும்பினார். அவர், ஜூன் 10ம் தேதி தொடங்கும் ‘கூலி’ படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
Similar News
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல் உரிமையாளர்களுடன் ஆலோசனை!

தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் & ஹோட்டல்களில் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நாளை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள ஹோட்டல் உரிமையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டருக்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய வழிகள் குறித்து ஆலோசித்து, தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.
News March 10, 2026
சென்னை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) சென்னை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.
News March 10, 2026
சென்னை: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக 2015-ல் தொடங்கப்பட்டது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் (ம) பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் ரூ.1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


