News June 5, 2024
தென்காசியில் மக்கள் நீதிமன்றம் நடத்த ஏற்பாடு

தென்காசி மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் வருகிற 8ஆம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அசல் வழக்குகள்,தொழிலாளர் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப வழக்குகள், நில ஆர்ஜித வழக்குகள், காசோலை உள்ளிட்டவை சமரச பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது என சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 1, 2025
தென்காசி: நாய் குறுக்கே வந்ததால் பைக் விபத்து

கடையநல்லூர் தாலுகா, வேலாயுதபுரத்தில் இருந்து மங்களாபுரம், கடையநல்லூர் செல்லும் சாலையில் சாம்பவர் வடகரை மேலூரை சேர்ந்த சீனிவாசன் என்ற முதியவரும் அவர் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வரும் போது நாய் குறுக்கே வந்து மோதியதால் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்பட்டது. 108 ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டதால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
News September 1, 2025
ஆதிதிராவிடர் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி

தென்காசி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு, சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படவுள்ளது
சேருவதற்கு தாட்கோ இணையதளத்தின் மூலம் www.tahdco.com பதிவு செய்து விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், இ.ஆ.ப. அவர்கள் தகவல்.
News September 1, 2025
தென்காசி: இனி எளிதில் சான்றிதழ் பெறலாம்!

தென்காசி மக்களே; உங்களுக்கு தேவையான
▶️சாதி சான்றிதழ்
▶️வருமான சான்றிதழ்
▶️முதல் பட்டதாரி சான்றிதழ்
▶️கைவிடப்பட்ட பெண் சான்றிதழ்
▶️விவசாய வருமான சான்றிதழ்
▶️சாதி கலப்பு திருமணச் சான்றிதழ்
▶️குடியிருப்புச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்களை பெற இந்த லிங்கில் <