News June 5, 2024
கடலூரில் 7 மணி வரை மழை

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (05.06.2024) இரவு 7 மணி வரையும் கடலூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களுக்கு இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Similar News
News March 8, 2026
பிறப்பு சான்றிதழ் பெற கால அவகாசம் நீட்டிப்பு – கலெக்டர்

இந்திய தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரின் அறிவுரையின்படி 1.1.2000-க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும், 1.1.2000 பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 26.09.2026 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள அலுவலகங்களில் உரிய சான்றுடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சிபி ஆதித்திய செந்தில்குமார் தெரிவிதுள்ளார்.
News March 8, 2026
கடலூர்: மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 20,369 மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். அவர்கள் வாக்களிக்க எதுவாக சாய்தளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னார்வலர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
News March 8, 2026
கடலூர்: PHONE-ல் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2 .அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி – 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி – 1033
7. பெண்கள் பாதுகாப்பு – 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


