News June 5, 2024
உக்ரைன் ராணுவத்துக்கு உதவினால் தாக்குதல்: ரஷ்யா

ராணுவ வீரர்களுக்குப் பயிற்சியளிக்க உக்ரைனுக்கு வரும் மேற்கத்திய நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அவர்களைத் தாக்குவதற்கான சட்டபூர்வ உரிமை தங்களுக்கு உள்ளதாக தெரிவித்துள்ள ரஷ்ய அதிபரின் செய்தித் தொடர்பாளர், நாட்டின் பாதுகாப்பு விவகாரத்தில் யாருக்கும் விலக்கு அளிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
விஜய்க்கு எதிராக இவரை நிறுத்த திட்டமா?

விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடலாம் என்று சொல்லப்படும் நிலையில், அத்தொகுதியை விசிக தங்களின் விருப்பப் பட்டியலில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. ஒருவேளை தொகுதி தங்களுக்கு கிடைத்தால், அங்கு விஜய்க்கு எதிராக ஆளூர் ஷா நவாஸை நிறுத்தவும் ஆலோசனை நடக்கிறதாம். ஆனால் மறுபக்கம், விஜய் அங்கு நின்றால் போட்டி கடுமையாக இருக்கும் என்பதால், திமுக வேட்பாளரே கூட அங்கு களம்காண வாய்ப்பிருக்கிறது என்கின்றனர்.
News March 7, 2026
பழம் சின்னது.. பவர் ரொம்ப பெரியது!

➤நாவல்பழம் – நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். ➤பப்பாளி – வெண் தோல் பாதிப்பை தடுக்கும். ➤விளாம்பழம் – மலச்சிக்கலை தீர்க்கும். ➤சீத்தாப்பழம் – இதயத்தை பாதுகாக்கும். ➤அத்திப்பழம் – உடல் எடையை குறைத்து எலும்புக்கு வலுசேர்க்கும். ➤கொடுக்காப்புளி – புற்றுநோய் வராமல் தடுக்கும். ➤சப்போட்டா – கண் பாதிப்பை தடுக்கும். அனைவரும் நலமுடன் வாழ அனைவருக்கும் SHARE THIS.
News March 7, 2026
ஒரே மாவட்டத்தில் 4 எம்பிக்கள்.. தமிழக அரசியலில் விநோதம்!

TN அரசியல் வரலாற்றில் அபூர்வ நிகழ்வாக ஒரே மாவட்டத்திலிருந்து 4 பேர் பார்லிமெண்ட் செல்கின்றனர். திருச்சி லோக்சபா எம்பியாக துரை வைகோ உள்ள நிலையில், துவரங்குறிச்சியை சேர்ந்த கவிஞர் சல்மா ராஜ்யசபா எம்பியாக உள்ளார். இந்நிலையில், மேலும், திமுகவின் திருச்சி சிவா, காங்., சார்பில், கிறிஸ்டோபர் திலக்கும் ராஜ்யசபாவுக்கு செல்ல உள்ளனர். இதனால், திருச்சி மாவட்டம் கூடுதல் முக்கியத்துவம் பெறும் என பேசப்படுகிறது.


