News June 5, 2024
ஆட்சி அமைக்க இன்றே உரிமை கோரும் பாஜக?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சி அமைக்க குடியரசு தலைவரிடம் இன்றே உரிமை கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மோடி இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், நிதிஷ் மற்றும் சந்திரபாபு நாயுடு கேபினெட் பதவி, மாநில சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது. ஆட்சி அமைத்தால் போதும் என்ற மனநிலையில் உள்ள பாஜக, அதை ஏற்று இன்றே ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளது.
Similar News
News December 5, 2025
2026-ல் 13 மாதங்களா?

இந்து மதத்தில் சூரியன்(365 நாள்கள்), சந்திரன்(354 நாள்கள்) என 2 நாள்காட்டிகள் உள்ளன. இவ்விரண்டிற்கும் 11 நாள்கள் வித்தியாசம் உள்ளதால், 3 ஆண்டுக்கு ஒருமுறை (32 மாதங்கள் & 16 நாள்கள்) ஒரு மாதம் கூடுதலாக வரும். இதை ஆதிக் மாதம் என்பார்கள். 2026 மே 17 முதல் ஜூன் 15 வரை இம்மாதம் வருகிறது. இந்த மாதத்தில் சுபகாரியங்கள் தவிர்க்கப்படும். இருப்பினும், இதனால் ஆங்கில நாள்காட்டியில் எந்த மாற்றமும் இருக்காது.
News December 5, 2025
கடைசி வரை நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் ஆசை

அரசியலில் ஆண்களுக்கே சிம்மசொப்பனமாய் திகழ்ந்த Ex CM ஜெ.,வுக்கு அரசியலை விட்டு விலகும் எண்ணம் இருந்தது என்றால் நம்பமுடிகிறதா? ஆம், அரசியல் ரேஸிலிருந்து விலகி, புக்ஸ், மியூசிக், செல்லப்பிராணியுடன் தோட்டத்தில் நேரத்தை செலவிட ஆசைப்படுவதாக 1999-ல் இண்டர்வியூ ஒன்றில் அவர் கூறியிருக்கிறார். யாரையும் சந்திக்காமல், எதுவும் பேசாமல் அமைதியான வாழ்க்கையை வாழவேண்டும் என்ற அவருடைய ஆசை கடைசிவரை நிறைவேறவில்லை.
News December 5, 2025
FLASH: ஏறுமுகத்தில் பங்குச்சந்தைகள்!

வாரத்தின் கடைசி நாளான இன்று பங்குச்சந்தைகள் ஏறுமுகத்தில் உள்ளன. மும்பையில் நடைபெற்ற நாணயக் கொள்கை குழு(MPC) கூட்டத்தின் முடிவுகளின்படி குறுகிய கால கடன்களுக்கான <<18475076>>வட்டி விகிதத்தை 0.25%<<>> குறைத்து RBI கவர்னர் அறிவித்துள்ளார். இந்த நிலையில், சென்செக்ஸ் 153 புள்ளிகள் உயர்ந்து 85,418 புள்ளிகளிலும், நிஃப்டி 46 புள்ளிகள் உயர்ந்து 26,080 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன.


