News June 5, 2024
தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது

இந்துத்துவா சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என தேர்தல் மூலம் மக்கள் தீர்ப்பளித்து இருக்கிறார்கள் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைந்த INDIA கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்று தமிழ்நாடு திராவிட பூமி என்பதை உணர்த்தியிருக்கிறது என்றவர், பாஜக ஆட்சியை வீழ்த்துவதற்கான INDIA கூட்டணி தலைவர்களின் முயற்சி வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Similar News
News September 23, 2025
தூங்கும் போது அதிக நேரம் சிறுநீரை அடக்குகிறீர்களா?

இரவில் பலரும் துக்கத்தை கெடுத்து கொள்ளக்கூடாது என்பதற்காக, அப்படியே சிறுநீரை அடக்குவார்கள். ஆனால், அது நோய்களுக்கு காரணமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறுநீர்ப்பை, நரம்புகளில் இது பாதிப்பை ஏற்படுத்தும். சிறுநீர் கழிக்கும் தூண்டுதலை உதாசினப்படுத்தினால், இடுப்பு தசைகள் வலுவிழக்கும். இதனால், கிட்னியில் கல் உண்டாகலாம். சிறுநீர்ப்பாதை தொற்றும் ஏற்படும். அடுத்த வாட்டி யோசியுங்க!
News September 23, 2025
இந்திய ரூபாயை இங்கெல்லாம் அப்படியே யூஸ் பண்ணலாம்

பொதுவாகவே நாம் வெளிநாடுகளுக்கு சென்றால், அங்குள்ள நாணயத்திற்கு ஏற்ப நமது ரூபாயை மாற்றுவோம். ஆனால், நேபாளம், பூட்டான், இலங்கை, சிங்கப்பூர், UAE, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் நமது ரூபாய் நோட்டுகளையே பயன்படுத்தலாம். அங்குள்ள உணவகங்கள், ஹோட்டல்கள் (Rooms), டாக்ஸிகள் ஆகியவற்றில் இந்திய ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகும். இது பொதுவாக சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது.
News September 22, 2025
ராசி பலன்கள் (23.09.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.