News June 5, 2024
கேள்விக்குறியான அண்ணாமலை எதிர்காலம்?

மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். இதேபோல் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. தேர்தலில் வென்று அண்ணாமலை மத்திய அமைச்சராகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அவரது கட்சிப் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது.
Similar News
News August 29, 2025
ராசி பலன்கள் (29.08.2025)

➤ மேஷம் – நன்மை ➤ ரிஷபம் – ஆதாயம் ➤ மிதுனம் – போட்டி ➤ கடகம் – புகழ் ➤ சிம்மம் – லாபம் ➤ கன்னி – தாமதம் ➤ துலாம் – முயற்சி ➤ விருச்சிகம் – வெற்றி ➤ தனுசு – ஆதரவு ➤ மகரம் – பரிசு ➤ கும்பம் – நிம்மதி ➤ மீனம் – உயர்வு.
News August 29, 2025
சிறிய கட்சிகளுக்கு ₹4,300 கோடி நன்கொடை

குஜராத்தில் 10 சிறிய கட்சிகள், கடந்த 5 ஆண்டுகளில் ₹4,300 கோடி நன்கொடை பெற்றது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அங்கு நடந்த 3 தேர்தல்களில் 10 கட்சிகளும் சேர்த்து ₹39.02 லட்சம் செலவு செய்ததாக கணக்கு காட்டிய நிலையில், தணிக்கை அறிக்கையில் ₹3,500 கோடி செலவிட்டதாக கட்சிகள் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை ECI விசாரிக்குமா (அ) சத்திய பிரமாணம் கேட்பதோடு முடித்துக் கொள்ளுமா என ராகுல் வினவியுள்ளார்.
News August 28, 2025
Xiaomi-க்கு நோட்டீஸ் அனுப்பிய ஆப்பிள், சாம்சங்

ஆப்பிள், சாம்சங் நிறுவனங்கள் Xiaomi நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளன. விளம்பரங்களில் தங்களது தயாரிப்புகளை கொச்சைப்படுத்துவதை உடனே நிறுத்த அந்நிறுவனங்கள் கேட்டுக் கொண்டுள்ளன. கடந்த ஏப்ரலில், ஐபோன் 16 புரோ மேக்ஸ் கேமரா, Xiaomi 15 அல்ட்ரா கேமராவை விஞ்சும் என நினைப்பவர்களுக்கு ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள் என Xiaomi விளம்பரம் வெளியிட்டது. அதேபோல் சாம்சங்கை தாக்கியும் விளம்பரங்களை வெளியிட்டுள்ளது.