News June 5, 2024
பாஜகவின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன?

மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு பாஜக ஆட்சி அமைக்கவுள்ளது. மைனாரிட்டி அரசு என்பது தலைக்கு மேல் கத்தி தொங்கும் நிலை என்பதால், கூட்டணி கட்சிகளை அனுசரித்து செல்ல வேண்டிய சூழலுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆட்சியை பலமாக தக்கவைக்க INDIA கூட்டணியில் இருக்கும் கட்சிகளை NDA கூட்டணியில் இணைக்க பாஜக முயலும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Similar News
News March 22, 2026
BREAKING: பாஜக பட்டியலில் இருந்து தமிழிசை நீக்கம்

புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கப்பட்டுள்ளது. 40 பேர் கொண்ட பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் எல்.முருகன், அண்ணாமலை பெயர்கள் உள்ளபோதும் தமிழிசை பெயர் நீக்கப்பட்டது அரசியல் ரீதியாக விவாதத்தை கிளப்பியுள்ளது. 2024 மக்களவை தேர்தலில் புதுச்சேரி பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் தமிழிசை பெயர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
புதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் இவர்கள் தான்!

புதுச்சேரியில் அதிமுக போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை EPS வெளியிட்டுள்ளார். அதன்படி, உப்பளம் தொகுதியில் முன்னாள் MLA-வும் புதுச்சேரி அதிமுக மாநில செயலாளருமான அன்பழகன் களமிறங்குகிறார். அதேபோல், உருளையன்பேட்டை தொகுதியில் காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் NR காங்கிரஸ் – பாஜக கூட்டணியில் அதிமுக அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
Surety வேண்டாம்.. ₹20 லட்சம் கடன் தரும் திட்டம்

முத்ரா கடன் திட்டத்தின் கீழ், ஏழை எளியோரும் தொழில் தொடங்கி, தொழில்முனைவோராக மாற ₹20 லட்சம் வரை எந்த பிணையமும் இல்லாமல் கடன் கிடைக்கிறது. இந்த கடனை 5 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்தினால் போதும். அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் கடன் பெறலாம். இத்திட்டத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ள https://www.mudra.org.in/ தளத்தை பார்வையிடுங்கள். SHARE.


