News June 5, 2024

பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி

image

மீண்டும் பதவியேற்கும் வகையில் பிரதமர் பதவியை மோடி ராஜினாமா செய்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அவரது இல்லத்தில் சந்தித்த மோடி, ராஜினாமா கடிதத்தினை வழங்கினார். இன்று மாலை நடைபெறவிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மீண்டும் பிரதமராக பதவியேற்க அவர் உரிமை கோருவார் எனத் தெரிகிறது.

Similar News

News March 4, 2026

பச்சை துண்டுடன் களமிறங்கிய விஜய்

image

தஞ்சையில் நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் பச்சை துண்டு அணிந்தபடி பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், வரும் தேர்தல் ஏன் TN-க்கும், டெல்லிக்குமான தேர்தல் என கேட்டதற்கு, விஜய் பாஜகவுக்காக பேசுவதாக திரித்து பேச தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார். சிறுபான்மையை பயமுறுத்தி செய்யும் ஏமாற்றும் வேலையை இனி செய்யமுடியாது என தெரிந்ததால் தனது பேச்சை திரித்து பேசி தில்லு முல்லு செய்வதாகவும் விமர்சித்துள்ளார்.

News March 4, 2026

தமிழ்நாடே திவால் ஆகப்போகிறது: விஜய்

image

TN-ல் இன்னும் கொஞ்ச காலத்தில் தண்ணீர் இல்லாமல் திவால் ஆகப் போவதாக செய்தி வந்துள்ளது என விஜய் கூறியுள்ளார். மணலைக் கொள்ளையடித்தால் வேற என்ன நடக்கும், மலைகளை முழுங்கினால் வேற என்ன நடக்கும் என கேள்வி எழுப்பிய அவர், மணல் மாஃபியாவுடன் திமுகவுக்கு உறவில்லை என்று சொல்ல முடியுமா என கேட்டுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக இந்த முதல்வரின் ஆட்சியில் தமிழ்நாடே திவால் ஆகப் போகிறது என கூறியுள்ளார்.

News March 4, 2026

ரேஷன் அட்டைதாரர்களுக்கு.. முக்கிய தகவல்

image

ரேஷன் கார்ட்டில் உள்ள மொபைல் நம்பரை இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். கிட்டத்தட்ட அனைத்து அரசு சேவைகளையும் ஆன்லைனில் செய்ய முடியும் என்றாலும், நம்பரை ஆன்லைனில் மாற்ற முடியாது. தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.

error: Content is protected !!