News June 5, 2024
கடலூரில் கனமழைக்கு வாய்ப்பு!

கடலூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கடலூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Similar News
News March 4, 2026
கடலூர்: தவாகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று 10-க்கும் மேற்பட்டோர் மாற்று கட்சிகளில் இருந்து விலகி, தங்களை தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைத்து கொண்டனர். இதையடுத்து விருதாச்சலம் நகர செயலாளர் இளையராஜா தலைமையில், புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நகர மற்றும் வார்டு நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
கடலூர்: கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குச்சாவடி மையங்களை, மறுசீரமைப்பு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் 2313 ஆக இருந்த வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட்டு, தற்போது கூடுதலாக 277 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டு மொத்தம் 2,590 வாக்குச்சாவடிகளாக உயர்த்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.