News June 5, 2024
திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்பு!

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. திருப்பத்தூர் உட்பட 15 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று(ஜூன் 5) மழை பெய்ய வாய்ப்புள்ளது. கோடை முடிந்தும் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெப்பம் வாட்டி வதைத்து வரும் நிலையில், இந்த மழை குறித்த அறிவிப்பு சற்று நிம்மதியை தந்துள்ளது. சில இடங்களில் மழை பெய்து வருவதும் குறிப்பிட்டத்தக்கது.
Similar News
News August 29, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெறும் முகாம் குறித்து விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை (ஆக.29) நடைபெற உள்ள ’உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் வாணியம்பாடி நகராட்சி 20,22 வார்டு திருப்பத்தூர் 17, 28,30 வார்டு ஜோலார்பேட்டை கேத்தாண்டபட்டி, கூத்தாண்டகுப்பம் ஊராட்சிகளுக்கும் நாட்றம்பள்ளி கொத்தூர் ஊராட்சி மாதனூர் ஒன்றியம் வட புதுப்பட்டு கீழ் முருங்கை வெங்கிலி ஊராட்சிகளுக்கும் ஆம்பூர் நகராட்சி வார்டு 25 ஆகிய பகுதிகளுக்கு முகாம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்
News August 29, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து போலீசார்

ஆகஸ்ட் 28 திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கொண்டு தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க
News August 28, 2025
திருப்பத்தூரில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

திருப்பத்தூர் மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.