News June 5, 2024

அரக்கோணம் தொகுதி தேர்தல் முடிவு

image

2024 மக்களவைத் தேர்தல்:
*திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் – 5,63,216 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் ஏ. எல். விஜயன்- 2,56,657 வாக்குகள்
*பாமக வேட்பாளர் கே. பாலு – 2,02,325 வாக்குகள்
*நாதக வேட்பாளர் அஃப்சியா நஸ்ரின்- 98,944 வாக்குகள்

Similar News

News April 3, 2026

டீ போட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்!

image

தேர்தல் வந்துவிட்டாலே வேட்பாளர்கள் பல்வேறு விதமாக வாக்கு சேகரிப்பது வழக்கம். அதேபோன்று அரக்கோணம் தனி சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று(ஏப்.2) மணியக்கார தெருவில் உள்ள ஒரு கடையில் டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரித்தார். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர். நகர செயலாளர் பாண்டுரங்கன் கவுன்சிலர்கள், பாபு, நரசிம்மன் சரவணன் உடன் இருந்தனர்.

News April 3, 2026

அரக்கோணத்தில் தவெக வாக்கு சேகரிப்பு!

image

ராணிப்பேட்டை: அரக்கோணம் தனி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழக வேட்பாளராக காந்தி ராஜ் போட்டியிடுகிறார். இவர் முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அப்போது அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத் தலைவர் நைனா மாசிலாமணி மற்றும் நிர்வாகிகளிடம் சால்வை அணிவித்து வாக்கு சேகரித்தார். வேட்பாளர் காந்திராஜ் ரயில் பயணிகள் சங்க உறுப்பினராக உள்ளார்.

News April 3, 2026

அரக்கோணத்தில் ரூ.1.26 லட்சம் பறிமுதல்

image

ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் நாகவேடு அரசு பள்ளி அருகே, நெமிலியில் இருந்து மளிகை பொருட்களுடன் வந்த வாகனத்தில் உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.26 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று (ஏப்.2) நடைபெற்ற இந்த நடவடிக்கையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

error: Content is protected !!