News June 5, 2024
பிளேயிங் லெவனை கணித்த தினேஷ் கார்த்திக்

டி20 உலகக் கோப்பை தொடரில் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடப் போகும் 11 பேர் கொண்ட இந்திய அணி பற்றிய கணிப்பை முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் வெளியிட்டுள்ளார். DK தேர்வு செய்த அணி:- ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, விராட் கோலி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ஜஸ்ப்ரித் பும்ரா.
Similar News
News August 28, 2025
ஆசியக் கோப்பை: மெளனம் கலைத்த ஷமி

ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் முகமது ஷமி இடம்பெறாதது பேசுபொருளானது. இதுதொடர்பாக பேசிய அவர், துலீப் டிராபி தொடரில் தன்னால் ஒரு போட்டியில் 5 நாள்கள் விளையாடும்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாட முடியாதா என கேள்வி எழுப்பினார். இருப்பினும், இந்திய அணியின் வெற்றிக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வது தேர்வுக் குழுவின் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார். ஷமியை தேர்வு செய்யாதது பற்றி என்ன நினைக்கிறீங்க?
News August 28, 2025
PM மோடியின் தாயாரை இழிவுபடுத்திய தொண்டர்கள்

பிஹாரில் ராகுல் காந்தியின் பொதுக்கூட்டத்தில், காங்கிரஸ் தொண்டர்கள் PM மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை மிகவும் தரக்குறைவாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் ஒருபோதும் இதுபோன்ற தரக்குறைவான விமர்சனங்களை ஏற்காது என்று கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால், இதை சகித்துக் கொள்ள முடியாது எனவும், ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியுள்ளது.
News August 28, 2025
கலவர வழக்கில் 22 பேர் குற்றவாளிகள்

கடந்த 2015-ல் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட ஷமீல் அஹமது உயிரிழந்த விவகாரத்தில், 1000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது கலவரமாக மாறியது. இந்நிலையில், இதுதொடர்பாக 6 கட்டங்களாக பதியப்பட்ட வழக்கில் 22 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ள திருப்பத்தூர் கோர்ட், 161 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இஸ்லாம் பாஷாவின் சொத்துகளை முடக்குமாறும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.