News June 5, 2024

ஜூன் 10இல் நோட்டு புத்தகம் வழங்க ஏற்பாடு

image

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன் 10ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. பள்ளிகள் திறக்கும் நாளிலேயே நோட்டு, புத்தகம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி நெல்லை மாவட்டத்தில் உள்ள 380 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நோட்டு புத்தகங்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் ஜூன் 10ஆம் தேதி அதனை மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்துள்ளதாக மாவட்ட கல்வி அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

Similar News

News July 7, 2025

மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (ஜூலை 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர், விபரம், காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

மாவட்டத்தில் இன்று இரவு காவல் பணி அதிகாரிகள் விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (ஜூலை 7) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News July 7, 2025

குதிரையில் மிடுக்காக பரிவேட்டைக்கு சென்ற சுப்ரமணிய சுவாமி

image

நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆனி பெருந்திருவிழா கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் திருநாளான இன்று காலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமி நடராஜர் பச்சை சாத்திய கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்தார். பின்னர் மதியம் சுப்பிரமணிய சுவாமி குதிரை வாகனத்தில் பரிவேட்டை சென்றார். இதனை நூற்றுக்கணக்கான பக்தர்கள் கண்டு கழித்தனர்.

error: Content is protected !!