News June 5, 2024
5ஜி அலைக்கற்றை ஏலம் மீண்டும் ஒத்திவைப்பு

தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சியின் அளவுகோளாக கருதப்படும் 5ஜி அலைக்கற்றை ஏல ஒதுக்கீடு நடைமுறை 3ஆவது முறையாக மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாளை நடப்பதாக இருந்த இந்த ஏலம் தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, ஜூன் 13ஆம் ஆம் தேதி நடைபெறும் என மத்திய தொலைத்தொடர்பு துறை அறிவித்துள்ளது. இந்த ஏலத்தில் ₹96,318 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்க வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Similar News
News March 3, 2026
பள்ளிகள் 10 நாள்கள் லீவு.. அரசின் கூடுதல் குட் நியூஸ்

பள்ளிகளுக்கான கோடை விடுமுறை இந்த முறை அதிக நாள்கள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலையொட்டி முன்கூட்டியே தேர்வுகள் நடத்தப்படும் என அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார். வழக்கமாக 1 – 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24-ம் தேதிக்குள் ஆண்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும். இம்முறை ஏப்., 2-ம் வாரத்திற்குள் தேர்வுகள் முடிவடையுமாம். இதனால், மேலும் 10 நாள்கள் வரை விடுமுறை கிடைக்கும். SHARE IT
News March 3, 2026
குவைத், ஓமனில் இந்தியர்களின் நிலை என்ன? PM ஆலோசனை

ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், குவைத் மற்றும் ஓமன் நாட்டு தலைவர்களுடன் PM மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். அங்குள்ள அசாத்தியமான சூழல் குறித்து கேட்டறிந்த மோடி, அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசித்துள்ளார். ஏற்கெனவே பஹ்ரைன் மற்றும் அபுதாபி இளவரசருடன் மோடி நேற்று தொலைபேசியில் பேசியிருந்தார். அப்போது ஈரானின் தாக்குதலுக்கு அவர் <<19276042>>கண்டனங்களையும் <<>>பதிவு செய்திருந்தார்.
News March 3, 2026
வங்கி கணக்கில் ₹2,000 பணம்.. வந்தாச்சு HAPPY NEWS

PM KISAN திட்டத்தின் 22-வது தவணைத் தொகை (₹2,000) எப்போது கிடைக்கும் என்ற விவசாயிகளின் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. மார்ச் 14-க்குள் டெபாசிட் செய்ய முடிவு செய்திருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இம்முறை KYC அப்டேட் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் பலருக்கும் பணம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. pmkisan.gov.in இணையதளத்தில் Know Your Status மூலம் உங்களுக்கு பணம் வருமா என்பதை அறியலாம்.


