News June 5, 2024

பாஜக, ஆம் ஆத்மிக்கு காத்திருக்கும் சவால்கள்

image

மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்து மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா சட்டப்பேரவைகளுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த 3 மாநிலங்களில் மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் 2 கட்சிகளும் பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், சட்டப்பேரவைத் தேர்தல்கள் சவாலாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Similar News

News March 28, 2026

BREAKING: தருமபுரி மாவட்ட திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

image

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பாக போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார். அதன்படி, தருமபுரி மாவட்டத்தில்
பாலக்கோடுட்டில் – டி.என்.வி.செந்தில்குமார் ,
பாப்பிரெட்டிப்பட்டி – பெ.பழனியப்பன்,
அரூர் (தனி) – அ. சண்முகம் ஆகியோர் களம் காண்கின்றனர்.

News March 28, 2026

எங்களை மேலும் மேலும் புண்படுத்தாதீங்க…

image

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மட்டுமல்ல சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளது இந்த டீக்கடைக்காரரின் போஸ்டர். நெல்லை VM சத்திரத்தில் உள்ள ஒரு டீக்கடையில், ’விலையேற்றத்திற்கு நாங்கள் காரணமல்ல.. ஏற்கெனவே புண்பட்டு போயிருக்கோம்; கேள்வி கேட்டு மேலும் புண்படுத்தாதீங்க… சிலிண்டர் விலை கூடி போச்சு’ என எழுதப்பட்டுள்ளது. இன்னும் என்னலாம் நடக்க போகுதோ?

News March 28, 2026

BREAKING: தொகுதி மாறினார் செந்தில் பாலாஜி

image

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கில் கடந்த முறை வானதி வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை அதிமுகவின் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!