News June 5, 2024
பாஜகவின் ‘400+’ கனவை சிதைத்த மாநிலங்கள்!

உ.பி., மகாராஷ்டிரா, மே.வங்கம், பிஹார் ஆகிய மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்களை வெல்ல பாஜக கூட்டணி தவறியுள்ளது. உ.பி.,யில் பாஜக கூட்டணி 36 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. 2019இல் மகாராஷ்டிராவில் 41 இடங்களை வென்ற NDA கூட்டணி இம்முறை 17 இடங்களில் மட்டுமே வென்றது. அதேபோல, NDA கூட்டணியின் வெற்றி மே.வங்கத்தில் 12 இடங்களிலும், பிஹாரில் 29 தொகுதிகளிலும் மட்டுப்படுத்தப்பட்டது, அதன் 400+கனவை சிதைத்தது.
Similar News
News December 4, 2025
திருச்சி மாவட்டத்திற்கு பெருமை: உலகளவில் சாதனை!

உலக அளவிலான பளு தூக்கும் போட்டி கடந்த வாரம் தாய்லாந்தில் நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட 16 பேரில், மணப்பாறை கல்பாளையத்தான் பட்டியை சேர்ந்த டிக்சன் ராஜ் மற்றும் கே.பெரியப்பட்டியை சேர்ந்த திலீப் ஆகிய இருவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இதனையடுத்து வெற்றி கோப்பைகளுடன் நேற்று இரவு ஊர் திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள், உறவினர்கள் உற்சாக வரவேற்ப்படித்தனர்.
News December 4, 2025
தமிழ்நாட்டில் Financial Pollution: MP வில்சன்

TN-க்கான நிதியை நிறுத்தி மத்திய அரசு ‘நிதி மாசுபாட்டை’ உருவாக்கியுள்ளதாக பார்லி.,யில் MP வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். நிலுவையில் உள்ள நிதியை பட்டியலிட்ட அவர், ஜல் ஜீவன் திட்டத்தில் ₹3,112 கோடி, நெல் கொள்முதல் & மானியங்களுக்காக ₹2,670 கோடி, சமக்ர சிக்ஷாவுக்கு ₹3,548 கோடி இன்னும் வராமல் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கான நீதியை உறுதி செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 4, 2025
சற்றுமுன்: விலை ₹1000 குறைந்தது

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ₹1 குறைந்து ₹200-க்கும், கிலோ வெள்ளி ₹1000 குறைந்து ₹2,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 10 நாள்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை குறைவதால், நம்மூரிலும் வரும் நாள்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.


