News June 5, 2024
வாக்குகள்: பாஜக VS காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக 240 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு நாடு முழுவதும் 23.6 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது 2019இல் கிடைத்த வாக்குகளைக் காட்டிலும் 70 லட்சம் அதிகம் ஆகும். அதேநேரத்தில் காங்கிரஸ் 99 தொகுதிகளில் வென்றுள்ளது. அக்கட்சிக்கு 13.7 கோடி பேர் வாக்களித்துள்ளனர். இது கடந்த 2019ஆம் ஆண்டில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகளை விட 1.8 கோடி அதிகமாகும்.
Similar News
News March 4, 2026
வரகு அரிசியின் ஆரோக்கிய நன்மைகள்

சிறுதானியமான வரகு அரிசியில் உடலுக்கு தேவையான பல நன்மைகள் இருக்கின்றன. வரகு அரிசியில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் உடல் எடையை குறைக்க முடியாமல் சிரமப்படுவார்கள் அதை உணவில் சேர்க்கலாம். அத்துடன், சர்க்கரையின் அளவு குறைந்து நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல வயிறு, குடலில் உள்ள புண்கள் குணமாகும். மாதவிடாய் பிரச்னைகள் தீர பெண்கள் இதை சாப்பிட டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News March 4, 2026
மார்ச் 4: வரலாற்றில் இன்று

*தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள் *உலக உடல் பருமன் நாள் *1931–இந்தியாவில் அனைவரும் உப்பை கட்டுப்பாடின்றி பயன்படுத்த பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் & காந்தி இடையே ஒப்பந்தம் கையெழுத்து *1944–அரசியல்வாதி மூ.அருணாச்சலம் பிறந்தநாள் *1978–விடுதலை போராட்ட வீரர் நீலகண்ட பிரம்மச்சாரி நினைவு நாள் *1980–டென்னிஸ் வீரர் ரோகன் போபண்ணா பிறந்தநாள் *2022–கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே நினைவு நாள்
News March 4, 2026
கச்சா எண்ணெய்: இந்தியாவுக்கு உதவ ரஷ்யா ரெடி

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்ட நிலையில், இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்ட ரஷ்யா முன்வந்துள்ளது. எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் அனுப்ப ரஷ்யா தயாராக உள்ளதாகவும், போர் நிலவரத்தை பொறுத்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, இந்தியாவில் 40-45 நாள்களுக்கான கச்சா எண்ணெய் & பெட்ரோலிய பொருள்கள் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


