News June 5, 2024
ஒடிஷா சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு

ஒடிஷா சட்டப்பேரவையில் உள்ள 147 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கட்சி வாரியாக பெற்ற இடங்களைத் தெரிந்து கொள்வோம்.
* பாஜக – 78
* பிஜூ ஜனதா தளம்- 51
* காங்கிரஸ் – 14
* சுயேச்சை -3
* மார்க்.கம்யூனிஸ்ட்- 1
Similar News
News September 22, 2025
பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்… 30 பேர் உயிரிழப்பு

பாக்.,ன் கைபர் பக்துன்க்வா பகுதியில் அந்நாட்டு விமானப்படை குண்டு மழை பொழிந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 8 வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலில், பொதுமக்களே பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சொந்த நாட்டு மக்களை ராணுவமே கொன்ற விவகாரம் விவாதமாகியுள்ளது.
News September 22, 2025
டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை!

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 190 Credit Manager & Agriculture Manager காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்து 23- 35 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு ₹64,820- ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News September 22, 2025
வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.