News June 5, 2024

ஒடிஷா: 21 தொகுதிகளில் 20இல் பாஜக வெற்றி

image

ஒடிஷா மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் பாஜக தனித்துப் போட்டியிட்டது. இதில் யாரும் எதிர்பாராத வகையில் பாஜக 20 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இம்மாநிலத்தை சுமார் கால் நூற்றாண்டு காலம் ஆட்சி செய்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. காங்கிரஸ் கட்சி கோரபுட் தொகுதியில் மட்டும் வெற்றிப் பெற்றது.

Similar News

News September 22, 2025

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்… 30 பேர் உயிரிழப்பு

image

பாக்.,ன் கைபர் பக்துன்க்வா பகுதியில் அந்நாட்டு விமானப்படை குண்டு மழை பொழிந்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் 8 வெடிகுண்டுகள் வீசப்பட்டதில், பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து நடத்திய தாக்குதலில், பொதுமக்களே பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால், சொந்த நாட்டு மக்களை ராணுவமே கொன்ற விவகாரம் விவாதமாகியுள்ளது.

News September 22, 2025

டிகிரி போதும்.. ₹64,820 சம்பளத்தில் வேலை!

image

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலியாக உள்ள 190 Credit Manager & Agriculture Manager காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. டிகிரி முடித்து 23- 35 வயதுக்குட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். தேர்ச்சி பெறுவோருக்கு ₹64,820- ₹93,960 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் அக்டோபர் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும்.

News September 22, 2025

வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

image

இந்தியாவில் வேலைக்கு செல்லும் வயதினரின்(15–59) எண்ணிக்கை 66%-ஆக அதிகரித்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 100 பேரிலும் 66 பேர் வேலை செல்லக்கூடிய நபராக இருக்கிறார்களாம். குறிப்பாக, டெல்லியில் வேலைக்கு செல்லும் ஆண்களை(70.9%) விட பெண்களின் எண்ணிக்கை(70.9%) அதிகம். 1971-ல் 53%-ஆக இருந்த வேலைக்கு செல்வோரின் எண்ணிக்கை, 2023-ல் 66.1%-ஆக உயர்ந்துள்ளது. இதனால் நாட்டின் பொருளாதாரம் உயரும் என சொல்கின்றனர்.

error: Content is protected !!