News June 5, 2024

ஜோதிமணிக்கு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

image

கரூரில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றதை அடுத்து ஜோதிமணிக்கு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலரும் தங்கவேல் மற்றும் மாவட்ட எஸ்பி பிரபாகரன் தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டு சான்றிதழ் வழங்கினார்கள். உடன் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமி சுந்தரி மாநகராட்சி மேயர் கவிதா கணேஷ் துணை, மேயர் தாரணி சரவணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News

News August 14, 2025

தொழில் பயிற்சி நிலையத்தில் கால அவகாசம் நீட்டிப்பு

image

கரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் 23.06.2025 முதல் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடியாக பெறப்பட்டு வருகிறது. தற்பொழுது கால அவகாசம் 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வரை தொலைபேசி (04324-222111, 9499055711, 9499055712) வாயிலாக அல்லது நேரில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தகவல் அளித்துள்ளார்.

News August 13, 2025

நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

கரூர் மாவட்டத்தில் நாளை (14.08.25) திருமா நிலையூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறுகிறது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மருத்துவ காப்பீடு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய. ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற பல கோரிக்கைகளை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 13, 2025

கரூர்: 500 அரசு உதவியாளர் வேலை: APPLY NOW

image

கரூர் மக்களே மத்திய அரசின் ஓரியண்டல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 17.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.<> இங்கே கிளிக்<<>> செய்து இணையம் வாயிலாக விண்ணப்பித்து கொள்ளலாம். கரூர் மக்களே, வேலை தேடுபவர்களுக்கு SHARE செய்து உதவுங்க!

error: Content is protected !!