News June 5, 2024
பாஜக – காங்கிரஸ் தேர்தல் ஒப்பீடு

பாஜக, காங்கிரஸ் கைப்பற்றிய தொகுதிகள் ஒப்பீடு:
▶1984- பாஜக – 2, காங்., – 404 ▶1989- பாஜக – 85, காங்., – 197 ▶1991- பாஜக – 120, காங்., – 244 ▶1996- பாஜக – 161, காங்., – 140 ▶1998- பாஜக – 182, காங்., – 141 ▶1999- பாஜக – 189, காங்., – 114 ▶2004- பாஜக – 145, காங்., – 138 ▶2009- பாஜக – 206, காங்., – 116 ▶2014- பாஜக – 282, காங்., – 44 ▶2019- பாஜக – 303, காங்., – 52 ▶2024- பாஜக – 240, காங்., – 99
Similar News
News August 28, 2025
விடியல் எங்கே? அன்புமணி அடுக்கடுக்கான கேள்விகள்

2021 தேர்தலின்போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளின் நிலைமை குறித்து ‘விடியல் எங்கே’ என்ற பெயரில், அன்புமணி புத்தகம் வெளியிட்டார். தமிழ் அலுவல் மொழி வளர்ச்சி பிரிவு அமைப்பு, ஜெயலலிதா மரணம் மீதான விசாரணையில் தண்டனை பெற்றுத் தருதல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுதல், ஈழத்தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமலே உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News August 28, 2025
ஊடகத் துறையினருக்கு விசா கட்டுப்பாடு விதித்த USA

வெளிநாட்டு ஊடகத் துறையினர், அமெரிக்காவில் தங்கி வேலை பார்ப்பதற்கு ‘I’ விசா வழங்கப்படுகிறது. இதன் கீழ் 240 நாள்கள் அங்கு இருக்க முடியும். இந்நிலையில், அந்நபரின் பணி ஒழுக்கம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டே விசா காலம் நீட்டிக்கப்படுமாம். ஒருவேளை இதில் இருந்து அந்நபர் தவறினால், அவருக்கான விசா கால நீட்டிப்பை குடியுரிமை அதிகாரி வழங்க மறுப்பு தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
News August 28, 2025
வேலைவாய்ப்பில் தமிழ்நாடு நம்பர்-1

நாட்டிலேயே உற்பத்தித் துறையில் அதிகப்படியான வேலை வாய்ப்புகளை அளித்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. 2023-24ம் ஆண்டுக்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளின்படி, பெரிய மாநிலங்களான உ.பி., மகாராஷ்டிராவை விட அதிக (15%) பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. அதேவேளை, குஜராத் 13%, மகாராஷ்டிரா 13% உ.பி., 8%, கர்நாடகா 6% பங்களிப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.