News June 5, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶இயல்: இல்லறவியல்
▶அதிகாரம்: ஒழுக்கமுடைமை
▶குறள் எண்: 140
▶குறள்: உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
▶பொருள்: உயர்ந்தோர் ஏற்றுக் கொண்ட ஒழுக்கம் எனும் பண்போடு வாழக் கற்காதவர்கள், பல நூல்களைப் படித்திருந்தும் கூட அறிவில்லாதவர்களே ஆவார்கள்.

Similar News

News March 7, 2026

விழுப்புரம்: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் கட்டாயமாக பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)

News March 7, 2026

தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஈரான்

image

அண்டை நாடுகளை தாக்கியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகள் மீது இனி எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என கூறிய அவர், அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரானை தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் ஈரானை பணிய வைக்க முடியாது; அந்த கனவு அவர்களுடனேயே மண்ணுக்குள் போக வேண்டியதுதான் எனவும் கூறியுள்ளார்.

News March 7, 2026

சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

image

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.

error: Content is protected !!