News June 4, 2024
லட்சிய பயணம் தொடரும்: தினகரன்

தற்காலிக தடைகளைத் தாண்டி, லட்சிய பயணம் தொடரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். பணம், பரிசுப் பொருட்கள், அதிகார துஷ்பிரயோகம், அவதூறுகளை கடந்து அமமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தேனி மக்கள் மீதான அன்பு சாம்ராஜ்ஜியம் தொடரும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 3, 2026
ஈரானின் உயர் தலைவருக்கான தேர்தலின் போது தாக்குதல்

ஈரானின் புதிய தலைமை உருவாகுவதை தடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்தியுள்ளது. கமேனியின் மரணத்தைத் தொடர்ந்து அடுத்த உயர் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாக்கெடுப்பு நடைபெற்று போது இந்த தாக்குதல் நடந்துள்ளது. 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை கட்டிடம் முழுவதும் அழிக்கப்பட்டது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.
News March 3, 2026
சந்திர கிரகணத்தால் இந்திய அணியின் பயிற்சியில் தாமதம்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 WC அரையிறுதிப் போட்டிக்காக இந்திய அணி மும்பையின் வான்கடே மைதானத்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அட்டவணைப்படி, இன்று மாலை 6 – இரவு 9 மணி வரை பயிற்சி நடைபெற இருந்தது. ஆனால் கிரகணம் காரணமாக பயிற்சி இரவு 7 மணிக்கு மேல் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. கிரகண நேரத்தில் பயிற்சி செய்வது நல்லதல்ல என்று கருதப்பட்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
News March 3, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.. ஓபிஎஸ் அதிர்ச்சி

OPS திமுகவில் இணைந்த நிலையில், அவரது ஆதரவாளர்கள் மீண்டும் அதிமுகவில் ஐக்கியமாகி வருகின்றனர். அந்த வகையில், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியை தொடர்ந்து செஞ்சி வே. ஏழுமலையும் அதிமுகவில் இணைந்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து அவர் மீண்டும் தாய் கழகம் திரும்பியுள்ளார். விழுப்புரம், தி.மலை மாவட்டங்களில் முக்கிய முகமாக அறியப்படும் ஏழுமலை, அதிமுக சார்பில் MP, MLA உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.


