News June 4, 2024
நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை

நாளை காலை 11 மணிக்கு மத்திய அமைச்சரவையை அவசரமாக கூட்டுகிறார் பிரதமர் மோடி. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் நாளை அமைச்சரவை கூடுகிறது. இதனால், என்ன முடிவு எடுக்கப் போகிறார் பிரதமர் என்று நாடே நாளைய தினத்தை நோக்கி காத்து கொண்டு இருக்கிறது. அமைச்சரவையை முழுவதுமாக கலைத்துவிட்டு மீண்டும் புதிய அமைச்சரவை அமைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 5, 2026
BREAKING: மேற்குவங்க கவர்னர் திடீர் ராஜினாமா

மேற்குவங்க கவர்னர் பதவியில் இருந்து விலகுவதாக ஆனந்த போஸ் அறிவித்துள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜியுடன் தொடர்ந்து மோதல்போக்கை கடைபிடித்துவந்த அவர், ஓரிரு மாதங்களில் பதவிக் காலம் முடிவடையவிருந்த நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு ஆனந்த போஸ் அனுப்பியுள்ளார். மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கவர்னர் பதவி விலகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
News March 5, 2026
தங்கம் விலை ₹5,240 குறைந்தது

போர் சூழலுக்கு நடுவிலும் தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருவது நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,240 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 22 கேரட் தங்கம் 1 சவரன் ₹1,26,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ₹1,20,960-ஆக சரிந்துள்ளது. இதே காலக்கட்டத்தில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹35,000 சரிந்து ₹2.95 லட்சத்திற்கு விற்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
News March 5, 2026
கான்ஸ்டன்டைன் ரவீந்திரனை திமுக தேர்வு செய்தது எப்படி?

திமுகவின் பேச்சாளரான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ராஜ்யசபா வேட்பாளராக தேர்வானது பலருக்கும் ஆச்சரியம் அளித்துள்ளது. எனினும் அவர் தேர்வானதற்கு கிறிஸ்துவ மீனவ சமூகத்தை சார்ந்தவர் என்பது முக்கிய காரணமாம். விஜய்யின் அரசியல் வருகை மீனவ சமூக மக்கள் மத்தியில் தாக்கம் ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படும் நிலையில், அம்மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


