News June 4, 2024
எட்டாக்கனியான பாஜகவின் ‘இந்தமுறை 400’ இலக்கு

2024 தேர்தலில் பாஜகவின் முக்கிய முழக்கங்களுள் ஒன்று ‘இந்தமுறை 400’ தொகுதிகளில் வெற்றி. அனைத்துப் பிரசார கூட்டங்களிலும் பாஜகவின் மூத்த தலைவர்கள் இந்த முழக்கத்தை எழுப்ப தவறியதில்லை. ஆனால், தேர்தல் முடிவுகள் இதற்கு நேரெதிராக வெளிவந்துள்ளன. பாஜக கூட்டணி சுமார் 290 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் 240 இடங்களில் வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
Similar News
News August 8, 2025
வீட்டு லோன் வாங்கியோருக்கு ஹேப்பி நியூஸ்!

வங்கிகளுக்கான RBI-யின் ரெப்போ வட்டி முன்பே குறைக்கப்பட்டாலும், பல வங்கிகள் அதன் பயனை வாடிக்கையாளர்களுக்கு தரவில்லை. இதனால் வீட்டு லோன் எடுத்த பலரும், லோன் எடுத்தபோது இருந்த பழைய (உயர்ந்த) வட்டி விகிதத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் லோன் வாங்கிய வங்கியை அணுகி, வட்டியை குறைக்க கோரலாம். இல்லையெனில், குறைந்த வட்டி தரும் வங்கிக்கு லோனை மாற்றிக் கொள்ளலாம். இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.
News August 8, 2025
முதியவர்களுக்காக வீடு தேடி செல்லும் ரேஷன் பொருள்கள்

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாரர்களின் இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள்களை வழங்கும் ‘முதல் அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை’ வரும் 12-ந் தேதி CM ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தின் மூலம் 20,42,657 முதியவர்களும், 1,27,797 மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2-ம் சனி, ஞாயிறுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
News August 7, 2025
ஆரஞ்ச் அலர்ட்.. நாளை கவனமா இருங்க!

தமிழகத்தில் மழை குறைந்த நிலையில், நாளை மீண்டும் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், தி.மலை ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாம். அதனால், நாளை வெளியே செல்லும்போது கவனம் தேவை மக்களே!