News June 4, 2024

ஸ்ரீபெரும்பத்தூர்: டிஆர் பாலு அமோக வெற்றி

image

2024 மக்களவைத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டி.ஆர். பாலு 7,லட்சத்து 11ஆயிரத்து 639 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து களம் கண்ட அதிமுக வேட்பாளர் பிரேம் குமார் 256538 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளரை விட 4,55,101 வாக்குகள் வித்தியாசத்தில் டிஆர் பாலு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News April 9, 2026

செங்கல்பட்டில் 250 கோழிகள் இலவசம்!

image

செங்கல்பட்டு மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News April 9, 2026

செங்கை: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

செங்கை மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!

News April 9, 2026

மாற்றுத்திறனாளிகளுக்கு வீல் சேர் வசதி!

image

செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் சுலபமாக வாக்களிக்க வீல் சேர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாவட்டம் முழுவதும் தேவையான அளவில் வீல் சேர்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் எந்த சிரமமும் இன்றி தங்கள் வாக்குரிமையை செலுத்த முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!