News June 4, 2024
ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.பாலு அபார வெற்றி

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளரும், திமுக நாடாளுமன்றக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு, 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பிரேம்குமார் 2ஆவது இடத்தையும், தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் வேணுகோபால் 3ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News August 7, 2025
விஜய்யுடன் கூட்டணி? பிரேமலதா சூசகம்

அரசியலுக்கு வந்தபிறகும் செந்தூரபாண்டியின் (விஜயகாந்த்) தம்பியாகவே விஜய் தன்னை காட்டிக் கொள்கிறார். குறிப்பாக கேப்டனின் போட்டோக்களை தவெகவினர் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில்தான், தற்போதைக்கு விஜயகாந்த் போட்டோக்களை பயன்படுத்த வேண்டாம்; கூட்டணிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளலாம் என நேற்று பிரேமலதா கூறினார். இது, விஜய்யுடன் கூட்டணி அமைப்பதற்கான மறைமுகமாக சமிக்ஞை என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
News August 7, 2025
மாரடைப்பை தடுக்கும் அனுலோம விலோம ஆசனம்!

✦அனுலோம விலோம- இது பிராணயாமம் வகையை சேர்ந்தது.
✦அனுலோம (Anuloma) என்றால் இயற்கையான வழி அல்லது நேர்செலுத்தல். விலோம (Viloma) என்றால் எதிர்செலுத்தல் அல்லது புரட்டிச் செல்வது
✦இந்த ஆசனம் மாரடைப்பு வருவதை குறைக்கிறது
✦ஆரம்பத்தில் 1–2 நிமிடங்கள் வரை செய்யலாம்
✦மன அழுத்தம் குறைகிறது. இதய ஆரோக்கியம் சீராகிறது
News August 7, 2025
காலையில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவது ஏன்?

காலை 6 மணி- 11 மணி வரையில் தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் , ரத்தம் & இதய அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும், ரத்தம் இறுகி, தடிமனாக இருப்பதால், குழாய்களில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதலில் நினைவில் கொள்ளுங்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கு திடீரென தூக்கத்திலிருந்து அதிர்ந்து போய், எழுவதும் அதிக அழுத்தம்தான்.