News June 4, 2024
வரலாற்றில் பெரும் வெற்றி: மோடி

என்டிஏ மீது நம்பிக்கை வைத்து 3ஆவது முறையாக தொடர் வெற்றியை மக்கள் அளித்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்திய வரலாற்றில் இது ஒரு பெரும் வெற்றி என்றும், அனைவரையும் தலைவணங்குவதாகவும் கூறிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்த நற்பணிகளை மேலும் தொடருவோம் என்றும் உறுதியளித்துள்ளார்.
Similar News
News March 11, 2026
நகைக் கடன் தள்ளுபடி முடிவு.. வந்தாச்சு ஹேப்பி நியூஸ்

திருச்சி திமுக மாநில மாநாட்டில் <<19350365>>நகைக் கடன்<<>> தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும் என காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக, தேர்தல் அறிக்கையில் நகைக் கடன் தள்ளுபடி வாக்குறுதியை சேர்க்க திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனிமொழி தலைமையிலான குழு, தேர்தல் அறிக்கையை விரைவில் ஸ்டாலினிடம் வழங்க உள்ளது. இதன்பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
News March 11, 2026
NDA கூட்டணியில் விஜய்? TTV சூசகம்

NDA கூட்டணி வலுப்பெறுவது தமிழகத்திற்கு நல்லது என TTV தினகரன் கூறியுள்ளார். கூட்டணியில் விஜய் இணைவாரா என்ற கேள்விக்கு, NDA-வில் புதிய கட்சிகள் வருவது சிறப்பான விஷயம் என்றார். கூட்டணி மேலும் வலுப்பெற வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும் அவர் தெரிவித்தார். கூட்டணிக்கு விஜய் வந்தால், சீட் பங்கீடு தொடர்பாக EPS மற்றும் பாஜக டெல்லி தலைமை பேசி முடிவெடுப்பார்கள் என பேசினார்.
News March 11, 2026
BREAKING: நடிகை ஹன்சிகா விவாகரத்து!

கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கத்தூரியா காதலித்து திருமணம் செய்த நடிகை ஹன்சிகா விவாகரத்து பெற்றுள்ளார். எந்தவித ஜீவனாம்சமும் அவர் கணவரை பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரையும் சேர்ந்து வாழ வைக்க குடும்பத்தினர் பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடிந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதமே, இன்ஸ்டாவில் இருந்து கணவருடனான போட்டோக்களை டெலிட் செய்த ஹன்சிகா, விவாகரத்தை சூசகமாக அறிவித்திருந்தார்.


