News June 4, 2024

இது நமக்கு சரியான பாடம்: இபிஎஸ்

image

அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும், அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்கு தேர்தல் முடிவு சாதகமாக வந்திருப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது எனக் கூறி, “சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா” என்ற நீலமலைத் திருடன் திரைப்படத்தின் பாடல் வரியை சுட்டிக்காட்டியுள்ளார்.

Similar News

News September 13, 2025

நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றமில்லை!

image

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளை கூட்டம் நேற்று (செப். 12) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.15 என நிர்ணயிக்கப்பட்டது. மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ள போதிலும், அதன் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த 16 நாட்களாக முட்டை விலை ரூ.5.15 ஆகவே நீடிப்பதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

News September 13, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (செப்.13) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

News September 13, 2025

மீண்டும் வருமா அந்த மகிழ்ச்சி!

image

மனிதரின் கிரியேட்டிவிட்டியால் தோன்றுவது தான் டெக்னாலஜி. ஆனால், அது இன்று நம் வாழ்க்கை முறையையே புரட்டிப் போட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகள் கிடைத்தாலும், நாம் இழந்துவிட்ட திறன்களும் ஏராளம். குறிப்பாக, டெக்னாலஜி அவ்வளவாக ஊடுருவாத நம் குழந்தைப் பருவம் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது நினைவிருக்கிறதா.. எப்போதாவது அந்த அனுபவங்களை நினைத்துப் பார்க்கிறீர்களா?

error: Content is protected !!