News June 4, 2024
புதுயுகத்தின் தலைவன் ‘பீம் ஆர்மி’ ஆசாத் வெற்றி

உ.பி.,யின் நகினா தொகுதியில் ஆசாத் சமாஜ் கட்சியின் தலைவர் ‘பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். 5,12,552 வாக்குகளைப் பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் ஓம் குமாரைவிட 1,51,473 வாக்குகள் அதிகம் பெற்று வென்றுள்ளார். அம்பேத்கர், கன்ஷிராம் ஆகியோரை வழிகாட்டியாக ஏற்ற ஆசாத், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்க களப்பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 22, 2025
29-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

வரும் 29-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
News September 22, 2025
விஜய் பிளானில் மீண்டும் மாற்றம்

வரும் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் சேலம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அதில் மாற்றம் செய்து, நாமக்கல், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்துக்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
News September 22, 2025
டிரம்ப் எச்சரிக்கையை கண்டுகொள்ளாத ஆப்கன்

பக்ராம் விமானப்படை தளத்தை கொடுக்க சொல்லி டிரம்ப் விடுத்த எச்சரிக்கைக்கு பதிலடி கொடுத்துள்ளது ஆப்கன் அரசு. ஆப்கன் நிலத்தில் ஒரு அங்குலம் கூட வழங்க முடியாது எனவும், நாட்டின் சுதந்திரம் மிகவும் முக்கியம் எனவும் பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமை அதிகாரி ஃபாசிஹுதீன் ஃபித்ரத் கூறியுள்ளார். அந்த விமானப்படை தளம் சீனாவுக்கு அருகில் இருப்பதால் அங்கு படைகளை குவிக்க டிரம்ப் விரும்புகிறார்.