News June 4, 2024
கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் வெற்றி முகம்

கிருஷ்ணகிரி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் தற்போது 1, 30,768 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சுற்றில் இருந்து தற்போது வரை முன்னணியில் உள்ளார்.
தற்போது 18 வது சுற்று முடிவில் 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 19, 2025
கிருஷ்ணகிரியை உலுக்கிய சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் சேர்ந்தவர் சிவபூபதி (45). கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் கே.சி. நகர் பகுதியில் உள்ள குறிஞ்சி நகரில் மனைவி பார்வதி, மகன்கள் நரேந்திர பூபதி (14), லதீஷ் பூபதி (11) ஆகியோருடன் கடந்த இரண்டரை ஆண்டுகளாக வசித்துவந்தார். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்த நிலையில் திடீர் பண நஷ்டம் ஏற்பட்டதால், நேற்று (அக்.18) காலை இரு மகன்களை கொன்று, தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
News October 19, 2025
கிருஷ்ணகிரி: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.
1) இந்தியன் ஆயில்: 18002333555
2) பாரத் பெட்ரோல்: 1800224344
3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!
News October 19, 2025
கிருஷ்ணகிரி மக்களே நாளை இதை மறவாதீர்!

தீபாவளி பண்டிகைக்கு குறைந்த ஒலி, குறைந்த அளவில் காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.