News June 4, 2024

கண் கலங்குகிறேன்: இபிஎஸ்

image

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. இந்நிலையில், எந்த பிரதிபலனும் பாராமல் அதிமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு இபிஎஸ் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், அல்லும் பகலும் அயராத உழைத்த தொண்டர்களுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேன் என கண் கலங்குகிறேன் எனக் கூறினார். மேலும், தேர்தல் முடிவு சோர்வடைய செய்யாது. 2026இல் மகத்தான வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Similar News

News September 22, 2025

தஞ்சை: வங்கியில் வேலை.. ரூ.80,000 சம்பளம்!

image

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!

News September 22, 2025

29-ம் தேதி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்

image

வரும் 29-ம் தேதி போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளில் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. இதை கண்டித்தும், உடனே சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.

News September 22, 2025

விஜய் பிளானில் மீண்டும் மாற்றம்

image

வரும் 27-ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த விஜய்யின் சேலம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக 27-ம் தேதி சென்னை, திருவள்ளூரில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தார். ஆனால் அதில் மாற்றம் செய்து, நாமக்கல், சேலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என அறிவிக்கப்பட்டது. தற்போது மீண்டும் சேலத்துக்கு பதிலாக கரூரில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்படுகிறது.

error: Content is protected !!