News June 4, 2024
ஆ.ராசாவுக்கு அழுத்தம் தராத எல்.முருகன்

நீலகிரியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகனை வீழ்த்தி, திமுக வேட்பாளர் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். 2009 தேர்தலில் வெற்றி பெற்று மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா, 2ஜி பிரச்னையால் 2014 தேர்தலில் அத்தொகுதியில் தோற்றார். அதனைத் தொடர்ந்து 2019, 2024 தேர்தகளில் வெற்றி பெற்றுள்ளார். எல்.முருகன் கடும் போட்டியளிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆ.ராசா வென்றுள்ளார்.
Similar News
News August 7, 2025
அதிமுக தலைமை மீது ராஜேந்திர பாலாஜி வருத்தம்?

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வராததால் ராஜேந்திர பாலாஜி வருத்தத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த லோக் சபா தேர்தலில் விருதுநகரில் தேமுதிக தோற்றாலும், சுமார் 3.80 லட்சம் வாக்குகள் பெற்றது. தமிழகத்திலேயே தேமுதிகவுக்கு அதிக வாக்குகள் இங்கு தான் கிடைத்தது. கூட்டணியில் தேமுதிக இருந்தால் சிவகாசியில் போட்டியிட தனக்கு உதவியாகயிருக்கும், அதுவே திமுகவுக்கு சென்றால் பாதகமாகவும் என வருந்துகிறாராம்.
News August 7, 2025
EPS-யிடம் நற்சான்றிதழை எதிர்பார்க்கவில்லை: அமைச்சர்

தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19%. பாஜக ஆளும் மாநிலங்களில் கூட இந்த வளர்ச்சியை எட்டவில்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இந்த வளர்ச்சியானது CM ஸ்டாலினின் முயற்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றார். மேலும் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என EPS சான்றிதழ் தரவேண்டுமென எதிர்பார்க்கவில்லை எனவும், திருப்பூர் SSI படுகொலையை காட்டிலும் மிக மோசமான சம்பவங்கள் வடமாநிலங்களில் நடைபெறுவதாகவும் கூறினார்.
News August 7, 2025
நகை கடனை எங்கு வாங்குவது பெஸ்ட்?

அடகு வைக்கும் இடங்களை பொறுத்து நகைக் கடனுக்கான வட்டி விகிதங்கள் மாறுகின்றன. பொதுத் துறை நிறுவனங்களில்தான் குறைந்த வட்டி (7.25 – 9%) கிடைக்கும். பிற வங்கிகள்( 10- 14%), நிதி நிறுவனங்களில் (12 – 24%) சற்று அதிகமாக இருக்கும். குறைந்த வட்டி வேண்டுமென்றால் பொதுத் துறை வங்கிகளை தேர்வு செய்யுங்கள். அதேநேரத்தில், உங்கள் நகைக்கு அதிக சதவீதத்தில் கடன் தொகை வேண்டுமென்றால் நிதி நிறுவனங்களை நாடலாம். SHARE IT.