News June 4, 2024
எந்த தலைவரும் செய்ய முடியாததை சாதித்த ஸ்டாலின்

இந்தியாவில் 30க்கும் அதிகமான தொகுதிகளை உடைய எந்த மாநிலத்திலும் பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் உள்ளிட்ட கட்சிகள் முழுமையான வெற்றியை பெறாத நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணி அனைத்து இடங்களையும் வென்றுள்ளது. 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லும் என்று ஸ்டாலின் கூறிவந்த நிலையில், அதை தற்போது அவர் சாதித்து காட்டியுள்ளார். இந்த வெற்றியின் மூலம் INDIA கூட்டணியின் முக்கிய முகமாக மாறியுள்ளார்.
Similar News
News March 24, 2026
அதிமுக மீது ஜி.கே.வாசன் அதிருப்தி

பாஜக, பாமக, அமமுக ஆகிய NDA கூட்டணி கட்சிகளுக்கான <<19456028>>தொகுதி பங்கீடு<<>> ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் அந்நிகழ்வில் ஜி.கே.வாசன் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதே கூட்டணியில் 2021-ல் த.மா.க. 6 இடங்களில் போட்டியிட்டது. தற்போது 8 சீட் கேட்கப்பட்டதாகவும், 4 மட்டுமே அதிமுக தர தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கண்டிப்பாக 6 சீட் வேண்டும் என்று திட்டவட்டமாக உள்ளனர்.
News March 24, 2026
அதிமுக கூட்டணியில் இருந்து விலகினார்

2026 தேர்தலில் தவாகவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக இந்திய ஜனநாயக புலிகள் கட்சி தலைவர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். வேல்முருகனை சந்தித்த அவர், கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவளித்த அவர், திடீரென தவாக பக்கம் தாவியுள்ளார். முன்னதாக, தனது 10 கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணியில் இடம்பெறுவேன் என வேல்முருகன் கூறியது குறிப்பிடத்தக்கது.
News March 24, 2026
மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே அரசு: அன்புமணி

மத்திய அரசை எதிர்த்தால் எதுவும் கிடைக்காது என்று அன்புமணி திமுகவை விமர்சித்துள்ளார். மத்திய அரசும் மாநில அரசும் ஒரே கூட்டணி அமைத்தால் மாநிலத்துக்கு நல்லது என்றும் திமுக மத்திய அரசை எதிர்ப்பதால் தமிழ்நாட்டுக்கு கட்டுமானங்கள், நிதியுதவி உள்ளிட்டவை கிடைக்காது என்றும் கூறியுள்ளார். மேலும், பாஜக, டெல்லியை குறைசொல்வது என்பது பயந்த முதலமைச்சர் மற்றும் திமுகவின் பேச்சு என்று கடுமையாக சாடியுள்ளார்.


