News June 4, 2024
சபதத்தில் வென்ற சந்திரபாபு நாயுடு

ஆந்திர சட்டமன்றத்தில் 2021இல் தனது குடும்பத்தினர் குறித்த விமர்சனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு, முதல்வராகத் தான் திரும்பி வருவேன் என சபதம் செய்தார். இதையடுத்து பாஜக, ஜனசேனா கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வென்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம், சபதத்தை அவர் வென்று காட்டியுள்ளார். ஏற்கெனவே 3 முறை ஆந்திர முதல்வராக அவர் பதவி வகித்துள்ளார்.
Similar News
News March 28, 2026
BIG BREAKING தேனி: திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு.!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக வேட்பாளர் பட்டியலை மு.க ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டுள்ளார். அதன்படி,
கம்பம் – நா.ராமகிருஷ்ணன்
போடிநாயக்கனுர் – ஓ.பன்னீர்செல்வம்
ஆண்டிபட்டி – ஆ.மகாராஜன்
ஆகியோர் போட்டியிடுவர் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிமுக விலிருந்து விலகி OPS இந்த முறை திமுக சார்பில் போட்டியிடுவதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
News March 28, 2026
எங்களை மேலும் மேலும் புண்படுத்தாதீங்க…

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் மட்டுமல்ல சிறு வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு ஒரு உதாரணமாக மாறியுள்ளது இந்த டீக்கடைக்காரரின் போஸ்டர். நெல்லை VM சத்திரத்தில் உள்ள ஒரு டீக்கடையில், ’விலையேற்றத்திற்கு நாங்கள் காரணமல்ல.. ஏற்கெனவே புண்பட்டு போயிருக்கோம்; கேள்வி கேட்டு மேலும் புண்படுத்தாதீங்க… சிலிண்டர் விலை கூடி போச்சு’ என எழுதப்பட்டுள்ளது. இன்னும் என்னலாம் நடக்க போகுதோ?
News March 28, 2026
BREAKING: தொகுதி மாறினார் செந்தில் பாலாஜி

திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியான நிலையில், செந்தில் பாலாஜியின் தொகுதி மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, தற்போது கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை தெற்கில் கடந்த முறை வானதி வெற்றிபெற்ற நிலையில், இந்த முறை அதிமுகவின் வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் போட்டியிடுகிறார். <<-se>>#TNElection2026<<>>


