News June 4, 2024
வேலூர் 17 ஆம் சுற்றில் திமுக 199, 246 வாக்குகள் முன்னிலை

வேலூர் தொகுதியில் 17 ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையில் தி.மு.க வேட்பாளர் கதிர் ஆனந்த் 516, 668 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பா. ஜ.க வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 317, 422 வாக்குகள் பெற்று 2 ஆம் இடத்திலும், அ.தி.மு.க வேட்பாளர் பசுபதி 104, 005 வாக்குகள் பெற்று 3 ஆம் இடத்தில் உள்ளனர். 17 ஆம் சுற்று முடிவில் 199,246 வாக்குகள் கூடுதலாக பெற்று கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News August 13, 2025
வேலூர் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் 4 லட்சத்தி 57 ஆயிரத்து 48 ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் பெற்று வருகின்றனர். இதில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பம் இல்லையெனில், தங்கள் குடும்ப அட்டையினை பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று (ஆக.13 ) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 13, 2025
247 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர் தகவல்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலுார் மாவட்டத்திலுள்ள 247 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது. வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்து ஊராட்சிகளில் தவறாமல் கிராம சபையை கூட்டப்பட வேண்டுமென அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் வேலூர் ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (ஆகஸ்ட் 13) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் இதில் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறுங்கள்.
News August 13, 2025
வேலூர் மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

வேலூர் மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <