News June 4, 2024
பதினெட்டாவது சுற்றிலும் விசிக வேட்பாளர் முன்னிலை

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் தற்போது விழுப்புரம் அரசு கலை கல்லூரி வளாகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. இதில் 18 ஆம் சுற்று முடிவில் விசிக – 4,12,168, அதிமுக – 3,44,588, பாமக – 1,57,482, நாம் தமிழர் – 50,430, விசிக வேட்பாளர் ரவிக்குமார் – 67,580 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
Similar News
News March 5, 2026
வளத்தியில் ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களுக்கு பரிசோதனைகள்

மேல்மலையனூர் வட்டம் வளத்தி பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவிகளுக்கு இரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மற்றும் செஞ்சி எம்.எல்.ஏ கே.எஸ்.மஸ்தான் இன்று (மார்ச்.04) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News March 4, 2026
விழுப்புரம்: திருமணம் செய்ய போகும் பெண்கள் கவனத்திற்கு!

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண உதவித்திட்டம் மூலம் படிக்காத பெண்களுக்கு 8 கிராம் தங்கக்காசு & ரூ.25,000, படித்த பெண்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டு வருகிறது. திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு உங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். தங்கம் பெற சூப்பர் வாய்ப்பு. தெரிந்தவர்கள் அனைவருக்கும் பகிருங்கள்.
News March 4, 2026
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*


