News June 4, 2024
பெரம்பலூர்: பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

பெரம்பலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 18வது சுற்று முடிந்த நிலையில திமுக வேட்பாளர் அருண் நேரு 4,22, 995 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் 1,48, 7052 வாக்குகளுடன் வது இடத்திலும் பாரிவேந்தர் 3 வது இடத்திலும் உள்ளார். பெரம்பலூர் திமுக மாவட்ட அலுவலகத்தில் பட்டாசு வெடித்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News September 13, 2025
பெரம்பலூர்: தீபாவளிக்கு பட்டாசு கடை வைக்க அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, வெடிபொருள் விதிகள் 2008-ன் கீழ் தற்காலிக பட்டாசு சில்லறை வணிகம் செய்ய, இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தங்களது விண்ணப்பத்தினை 10.10.2025–க்குள் இசேவை மையங்களின் மூலமாக அல்லது www.tnesevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
News September 13, 2025
பெரம்பலூருக்கு இன்று வருகை தரும் விஜய்

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (செப்.13) முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற பெயரில் தொடங்க உள்ளார். அதன்படி இன்று (செப்.13) மாலை பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தந்து பொதுமக்களை சந்திக்க உள்ளார் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
News September 13, 2025
முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அரசு திட்டங்களின் செயல்பாடுகளின் முன்னேற்ற நிலை குறித்து அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர் / மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் திருமதி எம்.லக்ஷ்மி மற்றும் மாவட்ட ஆட்சியர் திருமதி. மிருணாளினி தலைமையில் நேற்று இக்கூட்டம் நடைபெற்றது.