News June 4, 2024
தமிழகத்தில் சொதப்பியக் கட்சிகள்

தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலில் களம் கண்டன. அதேபோல அதிமுக கூட்டணியில் தேமுதிக, புதிய தமிழகம் கட்சிக் தேர்தலை சந்தித்தன. ஆனால், எந்தக் கட்சியும் வெற்றி பெறவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இக்கட்சிகள் தோல்வியை சந்தித்துள்ளன. அதேநேரம் திமுக கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளும் இத்தேர்தலில் வெற்றிவாகை சூடியுள்ளன.
Similar News
News March 13, 2026
CSK மீது புகார் அளித்துள்ள SUN Network!

தோனியை ரஜினியுடன் ஒப்பிட்டு மாஸாக CSK வெளியிட்டு வரும் விளம்பரங்களை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்தான், CSK-வுக்கு ஷாக் கொடுத்துள்ளது சன் டிவி நெட்வொர்க். இனி CSK விளம்பரங்களில் ஜெயிலர், கூலி பட பாடல்களை உபயோகிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என சன் டிவி நெட்வொர்க் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவேள SRH-க்கு யூஸ் பண்ண போறாங்களோ?
News March 13, 2026
தினமும் ரீல்ஸ் பார்ப்பவரா நீங்கள்?

அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கமிருந்தால் உடனே கைவிடுங்க. ஏனென்றால், புகை & மது பழக்கத்தை விட மூளைக்கு 5 மடங்கு பாதிப்பை அதிக நேரம் ரீல்ஸ் பார்ப்பது உண்டாக்கும் என ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. வேகமான காட்சிகள் மூளைக்கு உடனடி மனநிறைவை கொடுத்து, இன்னும் அதிகமாக பார்க்க ஏங்க வைக்கின்றன. இதனால், ஆழமான சிந்தனை குறைவது மட்டுமின்றி, கவனச்சிதறல், நினைவாற்றல் குறைவு போன்ற பிரச்னைகளை உண்டாகுமாம்.
News March 13, 2026
விடுமுறை.. 3 நாள்களுக்கு சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

வார விடுமுறை நாள்களில் நெரிசலின்றி ஊர்களுக்குச் செல்ல வேண்டுமா? உங்களுக்காகவே அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று முதல் 3 நாள்களுக்கு சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். TNSTC செயலி, இணையதளத்தில் இப்போதே டிக்கெட் புக் செய்து உங்க பயணத்தை ஈசியாக்குங்க!


