News June 4, 2024
டிடிவி தினகரன் வீழ்த்தப்பட்டார்

தேனி மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி கட்சியின் வேட்பாளரான டிடிவி தினரகரனை வீழ்த்தி திமுகவின் தங்கத் தமிழ்செல்வன் அபார வெற்றிபெற்றுள்ளார். 2ஆவது இடத்தை அதிமுக பிடித்துள்ள நிலையில், டிடிவி தினகரன் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனையடுத்து, தேனியில் திமுக தொண்டர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
Similar News
News August 27, 2025
ட்ரம்புக்கு எதிராக களமிறங்கும் தமிழகம்!

ட்ரம்பின் வரிவிதிப்பை கண்டித்து தமிழகத்தில் இடதுசாரி கட்சிகள் போராட்டம் அறிவித்துள்ளன. வரி விதிப்பால் பல உற்பத்தி தொழில்கள் பாதிக்கப்படும் நிலையில், அமெரிக்காவின் வர்த்தக போரைக் கண்டித்தும், ஏற்றுமதி தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தியும் போராட்டம் நடக்கவுள்ளது. செப்டம்பர் 5ஆம் தேதி சென்னை, திருச்சி, கோவை, உள்ளிட்ட முக்கிய தொழில் நகரங்களில் இடதுசாரிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
News August 27, 2025
அஸ்வினின் புது முயற்சியை பார்க்க ஆவல்: பிரீத்தி

IPL-ல் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார் அஸ்வின். மேலும் வெளிநாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் அஸ்வினின் மனைவி பிரீத்தி இன்ஸ்டாவில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் நீங்கள் மேற்கொள்ளும் புது முயற்சிகளையும், அதன் மூலம் அடையப் போகும் உயர்ந்த அளவிலான வெற்றிகளையும் காண ஆவலோடு இருப்பதாக கூறியுள்ளார்.
News August 27, 2025
விஜய் கூட்டணி வியூகம்.. திமுக அதிர்ச்சி

TVK யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் விஜய் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்குத் திருட்டை கண்டித்து பிஹாரில் நடைபெறும் 16 நாள் பிரச்சாரப் பேரணியில் விஜய் பங்கேற்க முயல்வதாகவும், காங்., உடனான கூட்டணிக்கு இப்பேரணியில் பங்கேற்றால் பலனளிக்கும் என விஜய் கருதுவதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யின் முயற்சி சரியா கமெண்ட் பண்ணுங்க.