News June 4, 2024
காணாமல் போனவர் இறந்த நிலையில் மீட்பு

பொன்னேரி அடுத்த பழவேற்காடு திருமலை நகரை சேர்ந்த மீனவர் பிரேம்குமார் கடந்த மாதம் 31ஆம் தேதி கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். இந்நிலையில் இன்று L&T கம்பெனி அருகில் காணாமல் போன பிரேம்குமாரின் உடல் ஒதுங்கி இருப்பதாக திருப்பாலைவனம் போலீசாருக்கு கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவம் இடம் சென்ற போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News March 14, 2026
அறிவித்தார் திருவள்ளூர் ஆட்சியர்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், குரூப் – 2 மற்றும் 2ஏ பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நாளை (மார்ச்.15) முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறவுள்ளது. இத்தேர்வினை திருவள்ளூர் வட்டத்தில் உள்ள ஸ்ரீநிகேதன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முற்பகல் 120 தேர்வர்களும், பிற்பகல் 124 தேர்வர்கள் என மொத்தம் 244 பேர் தேர்வு எழுத உள்ளனர் ஆட்சியர் பிரதாப் தெரிவித்துள்ளார்.
News March 14, 2026
திருவள்ளுர்: நடுரோட்டில் திடீரென தீ பற்றி எரிந்த லாரி

திருத்தணி அருகே சென்னை–திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியின் பின்பக்க டயர் திடீரென வெடித்து தீப்பற்றியது. நகரியில் இருந்து எம்-சாண்ட் ஏற்றி திருவள்ளூர் நோக்கி சென்ற லாரியை, ஓட்டுநர் பாஸ்கர் உடனே சாலையோரம் நிறுத்தினார். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீ பரவாமல் கட்டுப்படுத்தினர். இதில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமின்றி உயிர்தப்பினார்.
News March 14, 2026
திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பில் நேற்று (மார்ச்.13) இரவு 10 மணி முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம், காவல் நிலையம் வாரியாக மக்களின் எளிதான தொடர்பு வசதிக்காக வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சட்ட ஒழுங்கை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்படும்.மக்கள் தங்களது பகுதிக்கான பொறுப்பு அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ளும் வசதியையும் வழங்குகிறது.


