News June 4, 2024
INDIA கூட்டணி வெல்ல 42% வாய்ப்பு

நாடு முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் NDA கூட்டணி 295 இடங்களிலும், INDIA கூட்டணி 231 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பொய்யாக்கும் வகையில், பாஜக கூட்டணிக்கு INDIA கூட்டணி கடும் போட்டியை அளித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, NDA கூட்டணிக்கு 46%, INDIA கூட்டணிக்கு 42% வெற்றி வாய்ப்புள்ளதாக NDTV கணித்துள்ளது.
Similar News
News March 3, 2026
விமானத்தில் பெண்ணிடம் அத்துமீறிய திமுக நிர்வாகி

இண்டிகோ நிறுவன விமான பணிப்பெண்ணிடம் திமுக நிர்வாகி பாலியல் ரீதியில் அத்துமீறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 25-ம் தேதி, சென்னையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் வைத்து 25 வயது பணிப்பெண்ணிடம் திமுக கவுன்சிலர் பிரபாகரனும் அவரது நண்பரும் அத்துமீறியுள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
News March 3, 2026
பெட்ரோல், டீசல் விலை உயருகிறதா?

இஸ்ரேல், US-ன் தாக்குதலை அடுத்து ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது. அதன் வழியாகவே இந்தியாவுக்கு 40% கச்சா எண்ணெயும், 60% LPG-யும் கப்பலில் வருகின்றன. இந்நிலையில் ஈரானின் தடையால் பெட்ரோல், டீசல் விலை உயரும் என அச்சம் எழுந்தது. எனினும் அடுத்த 25 நாள்களுக்கு கச்சா எண்ணெய் & 30 நாள்களுக்கான LPG-யும் கையிருப்பில் உள்ளதால், பெட்ரோல் டீசல் விலை உயராது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News March 3, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

அய்யா வைகுண்டரின் அவதார விழாவையொட்டி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு நாளை (மார்ச் 4) உள்ளூர் விடுமுறையாகும். இதேபோல், திருவப்பூர் முத்து மாரியம்மன் கோயில் விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாளாகும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது. SHARE IT


